Sunday, November 21, 2010

SILA PAYANANGAL

சில நேரங்களில் ஏதோ சிலர்
ரயில் பயணங்களின் கடந்து செல்லாத  நிமிடங்களின்
நிசப்தங்களை நிறைவு செய்ய, என்னென்னவோ பேசி,
எதையெதையோ அலசி ஆராய்ந்து,
கதைகள் பல சொல்லி,
கவிதைகள் பாடி,
என்னை பற்றி அவன் அறிந்து.., அவன் சரித்திரம் முழுவதும் என்னிடம் பிட்டு வைத்து
என் ஒன்று விட்ட சித்தப்பா மகள் கணவரின்
தம்பி மனைவியின் அண்ணன் மகன் தான் நீ.., சுத்தி சுத்தி ஒன்னுக்குள்ள ஒன்னு
என்று அங்கலாய்த்து..,
அடுத்த ஊரில் இறங்கி காணாமல் போவார்கள்..!
மறுபடி ஒருமுறை பார்ப்போமா தெரியாது..!
பார்த்தாலும் தெரியாது..!
இருப்பினும்  
எத்தணை எத்தனை பேச்சுக்கள்..,
எத்தனை எத்தனை சிரிப்புக்கள்.!
இன்னமும் சொல்லப்போனால் வாழ்கை பயணத்தில் கூட
சிலர் இப்படி தான்..!
என்றும் சுவடுகளாய் நினைவுகள் தந்து எங்கோ
விலகிசெல்கிறார்கள்..!
ஒன்றாய் அமர்ந்து.., கண்ணீர் துளி பரிமாறி
நீயன்றி நான் இல்லை, இதயம் இடம் மாறி
இன்னும் ஒரு நூறு வருடங்கள் ஒன்றாக வாழ்வதென
கனவுகள் பல கண்டு ..,
கவிதைகள் பரிமாறி,
கைகோர்த்து மணல் வெளியில் கால் பாதம் பதித்து விட்டு,
தோள்களில் சாய்ந்தபடி முழுமதியை ரசித்துகிடந்து,
எத்தனையோ பேச்சுக்கள் அக்கு அக்காய் பிரித்து போட்டு,
குறுஞ்செய்தி வழிந்தோடி கைபேசி நிறைத்துவிட்டு,
பேசாத நாள் எல்லாம் நகராத நிலமாகி,
எதோ ஒரு நாள்
ஒரு சிறு பூசலுக்காய்
கல்லுக்கு கலைந்தோடும்  காக்கை கூட்டமென 
நினைவுகள் சிதறி தெறிக்க..,நல்லதெல்லாம்  மறந்து விட்டு..,
உன் நினைவுகள்  நரகமென..,
ஒரு நாழிகையில் முடிவு செய்து..,
அழகிய நினைவுகளை  சுட்டெரித்து சாம்பலாக்கி
அந்த சாம்பலிலும் கங்காக  நடந்து விட்ட தவறை மட்டும்
நீருற்றி புகைக்க வைத்து !
எத்தனை பேச்சுக்கள்.., எத்தனை வசந்தங்கள்..,
எத்தனை கவிதைகள்.., எத்தனை கோபங்கள்..,
எத்தனை தாபங்கள், கனவுகள், கழவுகள், மெய்கள்,பொய்கள்,
சண்டைகள், முத்தங்கள், தவிப்புகள்..!
சாம்பலின் போனிக்ஸ் போல் அத்தனையும் எழுந்தாலும் 
ஒரு நொடியில்  பொய் எனவும் ,
நிழலேன்றும் ,
நடிப்பேன்றும்..,  மறந்துவிட்டு
எங்கெங்கோ செல்கின்றோம் .
எத்தணை நாள் கழிந்தாலும்..!
கண்ணின் மை கலைந்து காதோரம் வந்தபின்பும்
எதோ ஒரு ஓரத்தில் என்றைக்கும் சிறு பொறியாய் அந்த ஞாபகங்கள் நிலைத்திருக்கும்..!
மீண்டும் ஒரு நாள் நாம் சந்திக்க நேர்ந்தாலும்
அந்த அந்தி மாலை  பொழுதும்..,
நம் முதல் வார்த்தையும்..,
நான் சொன்ன காதலும்..,
அந்த புத்தகமும்..,
கண்ணாடியும்..,
மரமும்.., மார்கழி மலரும்,
பச்சை வயலும்..,
நம் தோழமை தூறலும்..,
கல்லின் சிலைகளும்..,
மிட்டாயும்.., கத்தியும்..,
கவிதையும்., பேனாவும்..,
காதல் சிலையும்..,
அத்தணையும் நெஞ்சோடு
ஒரு நொடியில் வழிந்தோடும்..,
 திரை மீது நிழலாடும் பிம்பங்கள்
போல நம்முள் நினைவெல்லாம் அலைந்தோடும்..,
இதழ்கள் ஊமையாக..,
இதயம் கனத்துப்போக..,
கண்களின்  ஒரு துளி  நீர் மட்டும்
சொல்லாமல்
சொல்லிவிடும்
நாம் அன்று சொல்லாத
உணர்வை மட்டும்..!
அந்த நிசம்ப்த பேச்சுக்களில்..,
என் உயிருக்குள் உருண்டிருக்கும் ..,
உன்னை நினைத்திருந்த பொழுதுகளும்..,
அத்தனையும் கழிந்த பின்பும் எங்கோ ஒரு ஓரத்தில்
எட்டாமல் கிடந்திருக்கும் நாம் விட்டு சென்ற
உறவு மட்டும்.

No comments:

Post a Comment