இன்று நாள் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமல் தான் தொடங்கியது , அதற்கும் காரணம் இருக்கிறது , இன்னைக்கு மறுபடியும் சென்னை போகணும் லீவ் முடின்சது. இது நானா அசை பட்டு எடுத்த முடிவு தான், சின்ன வயசுலருந்தே சினிமான்னா அப்படி ஒரு காதல். பொதுவா தமிழ் பொண்ணுங்க சினிமாவுக்கு வர விரும்பமாட்டாங்க அதுலயும் சவுத் தமிழ்நாடுன்னா சொல்லவே வேணாம், அப்படி இருக்கும்போது மதுரை பொண்ணான நான் சினிமாவ தேர்ந்தேடுத்ததுக்கு காரணம் சின்ன வயசுலருந்தே எனக்குள்ள இருந்த சினிமா மோகம்னே சொல்லலாம். சாப்பிடுரேனோ இல்லையோ தினம் ஒரு படமாவது பாத்துருவேன், நான் எங்க வீட்ல அதிகமா திட்டு வாங்கினதே சினிமாக்கு போகணும்னு அடம் பிடிச்சுதான். சில சமயம் போக நினைச்சு போகமுடியாம போனா மணிகணக்குல அழுதுருக்கேன். சினிமா ஒரு என்டேர்டைன்மேண்ட மட்டும் இல்லாம என் வாழ்கைய ஆக்ரம்மிக்க ஆரம்பிச்சது, நான் பாக்குற விஷயங்கள், பேசுற வார்த்தைகள், மனிதர்கள் எல்லாத்தையும் சினிமாவோட கலந்து பாக்க ஆரம்பிச்சேன், சில கதாபாத்திரங்கள் கூட வாழ ஆரம்பிச்சேன். அதுனாலதான் தனியா தூங்கி கூட பழக்கம் இல்லாத நான் தைரியமா சென்னை வரைக்கும் தனியா வந்து படிக்க முடிவு செஞ்சேன். அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு, சினிமாவ தவிர வேற ஏதுவும் என்னால படிக்கவோ செய்யவோ முடியும்னு எனக்கு தோனல ஏன்னா நான் இதுவரை படிச்ச எல்லா இடத்துலயும் என்னால முழு மனசா படிக்க முடிஞ்சதில்ல, சொல்ல போனா கணிதமும், வரலாறும், கணக்கும் எனக்கு ஏப்பவுமே பிடிச்சதில்லை , புரிஞ்சுக்கவும் நான் விரும்பல, கல்லூரிக்கு போகவே வெறுப்பா இருக்கும்.
பாடம் பிடிக்கல அதுனால படிக்கல, சினிமாவ தேர்ந்தெடுதேன். எங்க அப்பா அம்மாக்கு நான் செல்லம்ரதால அவுங்க என் ஆசையா நிறைவேத்தினாங்க, சென்னை போனேன் படிக்க, என் பிரச்சன எல்லம் தீந்ததுனு நினைச்சேன். எனக்கு பிடித்த பாடம், நான் ரசிச்ச விசயத்த படிக்க போறேன் அதுக்கு பரிச்சையும் , மதிப்பெண்ணும். நான் அதிர்ஷ்டசாலி இல்ல?
இல்ல, முதல்ல நானும் அப்படி தான் நினைச்சேன், ஆனா நாட்கள் போக போக தான் உணர்ந்தேன் நான் கனவுகளை தேடி என் நிஜங்களை தொலைச்சுட்ருகேன்னு . ஆமா, எனக்கு கல்லூரி பிடிச்சது ஆனா கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்கள்ல என் தனிமை என்ன கொடுமை செய்ய ஆரம்பிச்சது.
மதுரைல இருந்த வர வீடு பிடிச்சது.., கல்லூரி பிடிக்கல . இப்ப கல்லூரி பிடிச்சுருக்கு ஆனா வீட்டுக்கு வந்தா தனிமை கொல்லுது. ஏதேதோ இலட்சியங்கள் , என்னென்னவோ ஆசைகள் இதுக்காக எல்லாம் போராடி உறவுகளோட பக்கத்துல வாழற இனிமைய தொலைச்சுடோம்னு தோணுது. முன்னெல்லாம் சென்னை வாழ்க்கை தூரத்து விழாக்கா பள பளன்னு தெரிஞ்சது, பக்கதுல போனப்பறம் தான் அதுல விட்டில் பூச்சியா விழுந்துட்டதா உணர்ரேன், மதுரைக்கு வந்துட்டு போற ஒவ்வொரு தடவையும் இனம் புரியாத தவிப்பு எனக்குள்ள ஏற்படுது, சென்னைலருந்து மதுரை கிளம்பும்போது இனம் புரியாத பூரிப்பும் இருக்கு.., இப்ப நான் தவிப்போட இத எழுதுறேன். நான் மட்டும் இல்ல சொந்த ஊற விட்டு படிப்புக்காகவும், வேலைக்காகவும் எங்கெங்கயோ வாழ்ந்துட்ருக்க பல பேர் இப்படி தான் நினைப்பாங்க. இனியாவது வாழ்க்கையோட உண்மையான சந்தோசத்த முடிஞ்சா உணருவோம்.
No comments:
Post a Comment