Tuesday, November 16, 2010

ENGAE AVAL?

"காலை எழுந்தாச்சு என்னைக்கும் போல இன்னைக்கும் ஒவ்வொரு கம்பெனியா  அலைய வேண்டியதுதான்". விடியும்போதே சலித்து கொண்டான் கணேஷ் பாரதி @ கணேசன். "கவலை படாத டா காலங்காத்தால சலிச்சுக்காத .., போ போய் வேலைய பாரு" இது ஷங்கர் கணேசனின் தோழன், சில சமயம் எதிரி, பல சமயங்களில் வங்கி, ஆபத்பாண்டவன் இப்படி பல அவதாரங்கள் இவனுக்கு.  கணேசனுக்கு மதுரை பக்கம் ஊரு.., இங்க சினிமா வாய்ப்பு தேடி வந்து வருஷம் நாலு முடிஞ்சாச்சு.., இது வர 5 படங்கள்ல உதவி இயக்குனரா வேலை பாத்தாச்சு, இப்ப சொந்தமா படம் எடுக்க ஒவ்வொரு பட கம்பெனியா ஏறி இறங்குறான். கணேசன் குடும்பம் ஊர்ல நல்ல வசதியான குடும்பம் தான்.., அப்பா சொந்தமா அரிசி மண்டி வச்சுருக்காரு.., பய மண்டிய பாக்காம கலைய வழக்குரேன் கழுதைய வழக்குரேன்னு திரியுராநேனு அவருக்கு வருத்தம், ஒரு கலைஞன அரிசி மண்டில அடைக்க பாக்குராரேனு கணேசனுக்கு வருத்தம். பொட்டிய கட்டிட்டு பட்டணம் வந்துட்டான்.
             கணேசனுக்கு தமிழ் சினிமாவுல இது வர யாருமே சரியான காதல் கதை ஒன்னு சொல்லலன்னும் அந்த குறைய தன்னால மட்டும் தன் தீத்து வைக்க முடியும்னு அசைக்க முடியாத நம்பிக்கை. அப்பப்ப சொல்லிக்குவான் "ச்சா, ஒரு டைட்டானிக், ஒரு ரோமன் ஹாலிடே மாதிரி படங்கள நம்ம தமிழ் மக்கள் எப்ப தான் பாக்க போராங்களோ.., அவுங்களுக்கு அந்த குறைய தீத்து வைக்கணும்டா, அதுக்காகவாச்சும் நான் படம் எடுக்கணும் பங்காளி".
              கணேசனுக்கு காதல் படம் மட்டும் தான் எடுக்கனும்ன்குற  உயர்ந்த லட்சியம் வர காரணம் தேனு அதான் அவன் ஊரு போஸ்ட் மாஸ்டர் பொண்ணு தேன் மொழி. தேன் மொழி குடும்பம் கணேசன் ஊருக்கு குடிவரும்போது அவனுக்கு பதினெட்டு வயசு இருக்கும். மூணாவது முறையா பிளஸ் டூ படிச்சுட்ருந்தான். தேனு அவன் கிளாஸ் தான், பாவம் பட்டணத்துல படிச்ச புள்ள இப்ப இந்த கிராமத்து பள்ளி கூடத்துல கஷ்ட படுதேன்னு கணேசன் மனசு தாங்கல. தேனுக்கு எல்லா உதவியும் மாஞ்சு மாஞ்சு செஞ்சான். ஆனா அது உதவி இல்ல உபத்திரவம்னு தேனுக்கு அப்ப புரியல, பாவம். தேன பாத்ததுமே கணேசன் மனசுக்குல ஆயிரம், இல்ல இல்ல கோடி பட்டம் பூச்சி பறக்க ஆரம்பிச்சுடும்.., இளையராஜாவும் எம். எஸ். வி யும் சேந்து மனசுக்குல ஒரு சங்கீத மஹா யுத்தமே நடத்திருவாங்க.
              "இவ்வளவு இருந்து என்ன அந்த புள்ள கிட்ட சொல்ல வக்கிலயே டா உனக்கு" என்று கணேசனின் உயிர் நண்பர்கள் அவனை மட்டைய கட்டி இறக்கி விட , ஒரு நல்ல நாள்ல தேனு கிட்ட சொல்லிரதுன்னு இறங்கினான். கஷ்டப்பட்டு வராததெல்லாம் முயற்சி பண்ணி கவிதையா எழுதினான் ஒரு கடிதம்.
                                            அன்பே தேனு
                                        உன் கண்ணு கரு மீனு
                                        என் மனச பறிச்சுட்ட நீனு
                                       வந்து சம்மதம் சொல்லு என் கண்ணு

நண்பன் ராசு கஷ்டப்பட்டு எழுதித்தந்த கவிதையோட தேன்மொழிய சந்திச்சான். அன்னைக்கு தான் அவன் வாழ்க்கைலயே மிக பெரிய திருப்பம் நடந்த நாள். தேனு சொன்ன வார்த்த ஒவ்வொன்னும் கணேசனோட வாழ்கையவே மாத்திருச்சு.
அப்படி என்னதான் சொல்லுச்சு தேன் மொழி....

அடுத்த இடுகையில் ............

                                   

No comments:

Post a Comment