மீண்டும் தொடர்கிறது.....
அப்படி என்ன சொல்லுச்சு தேனு? இப்ப பார்போம்.....
"கணேசா, இங்க பாரு நான் உன்ன மட்டும் இல்ல இப்ப யாரையும் காதலிக்கிறதா இல்ல.., நீ வேற சினிமா அது இதுன்னு அலையுற.., எனக்கு இது எல்லாம் சரி பட்டு வராது.., எனக்கு வீட்டுல பாக்குற மாப்ளைய கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா அவன் மாச சம்பளத்துல வாழ்ந்த போதும். இந்த சினிமால்லாம் நிச்சயமில்ல.., நீ எங்க போவ, என்ன பண்ணுவ, எப்படி வருவன்னு எதுவுமே உறுதி இல்லாம உன்ன எப்படி நம்புறது? பொதுவாவே இந்த சினிமால சான்ஸ் தேடி போறவங்க எல்லாம் வாழ்கைல உருப்படறது இல்ல.., சும்மா சில நாள் வெட்டியா அலைஞ்சுட்டு அப்பறம் எதாவது உதவாத வேலைக்கு போவாங்க.., எனக்கு சினிமால்லாம் பிடிக்காது" அரை பக்க வசனம் பேசிவிட்டு நக்கலாக சிரித்துவிட்டு சென்றாள். போடி போ உன் தலை எழுது ஒரு போறேமேனயோ, போஸ்ட் மாஸ்டரையோ, இல்ல மாட்டு ஆஸ்பித்திரி கொம்பௌந்டெரயொ தான் கட்டிக்க உனக்கு குடுத்து வச்சுருக்கு. இந்த டிறேச்டோரா கட்டிக்கிற ராசி உனக்கு இல்ல, ஒரு நாள் தமிழ் திரை உலகமே என் பேர சொல்லும்போது பீல் பண்ணுவ .., நான் வந்து காட்டுரேண்டி..., அப்பா பாத்துக்குறேன் உன்ன.
கணேசனுக்கு சுரீர் என்றது , ஒரு போனு நம்மள இவ்ளோ கேவலமா பேசிட்டாளே இதுகாகவாது வாழ்கைல சாதிச்சு காட்டனும், சபதம் எடுத்து கொண்டான். அதன் பின் விளைவுகள் தான் அப்பாவோட சண்ட போட்டது, சென்னை வந்தது எல்லாம்.
சரி இப்போ என்ன விசேசம், கணேசனுக்கு ஒரு புது வாய்ப்பு கிடச்சுருக்கு, தயாரிப்பாளர் ரங்கமுத்து நடராஜன் வர சொல்லிருக்காரு ஆபீசுக்கு. இதோ கிளம்பிட்டே இருக்கான். ரங்கமுத்து இதுவர நாலு படம் எடுத்துருக்காறு, அதுல மூணு ஹிட். மத்த யாருகிட்டையும் இல்லாத நம்பிக்கை கணேசனுக்கு இவரு மேல, ஏண்ணா இவரும் கணேசன் ஊரு பக்கம் தான். கிட்ட தட்ட பாத்து மாசமா பாக்க முயற்சி பண்ணியும் முடியல. போன வாரம் தான் டைரக்டர் தமிழரசன் ஷூட்டிங்க்ல சந்திச்சான். ஊரு பக்கம்னதும், அவருக்கு ஒரு பிடிப்பு வந்துருச்சு. தம்பி என்ன அடுத்த வாரம் ஆபீஸ்ல வந்து பாருங்கனாரு.கிளம்பிட்டான் இப்போ.
ஆபீஸ் நல்ல தான் இருக்கு, குழு குளுன்னு ஏசி. "ரங்கமுத்து சார் வர சொன்னாரு" அழகாக இருந்த ஆபீஸ் பெண்ணிடம் சொன்னான், அவள் காத்திருக்கும் படி கனிவாக உத்தரவிட்டாள். ஒரு மணி நேர காத்திருப்பு அவனுக்கு அல்லுபாக தெரியவில்லை. அவளது ஒவ்வொரு சிரிப்பும், தொலைபேசி உரையாடலும், கழுத்து சங்கிலியும், அவள் எழுதிய பேனாவின் அழகும், மடிப்பு கலையாத அரக்கு நிற புடவையும் அவனை பிஸியாக வைத்திருந்தது. நேரம் போனதே தெரியவில்லை அவனுக்கு. "சார் உங்கள குப்பிடுறாரு" அருகில் வந்து சொல்லிவிட்டு சென்றாள். ஆஹா அருமையான perfume.
மனமின்றி எழுந்து ரூமுக்குள் சென்றான். "வாப்பா கணேசா, கரெக்டா வந்துட்டியே.. உக்காரு." ரங்கமுத்து சிரித்து கொண்டே சொன்னார். "இல்ல சார் பரவாஇல்ல இருக்கட்டும்" இது கணேசன். "அட என்னப்பா நீ, இவ்வளவு அடக்கமா இருக்க நம்ம ஊரு பயலாச்சே! சொல்லுப்பா" இது ரங்கமுத்து.
கணேசன் "சார் என்ன வர சொல்லிருந்திங்க, நான் கிட்ட தட்ட நாலு வருஷமா இங்க அசிஸ்டண்டா இருக்கேன், சார் ஒரு வாய்ப்பு தந்தா டைரக்டர் ஆகிடுவேன்.., என்கிட்ட நிறைய நல்ல ஸ்கிரிப்ட் எல்லாம் இருக்கு, நீங்க தான் மனசு வைக்கணும்"
ரங்கமுத்து "அட நீ வேறப்பா, உன்ன பத்தி தெரிஞ்சு தானே வர சொல்லிருக்கேன், நம்ம ஊரு பையனா போய்ட்ட உனக்கு செய்யாம நா யாருக்கு செய்ய போறேன்"
கணேசனால் நடப்பது எதையுமே நம்ப முடியவில்லை. மனசுக்குள் கோடி தேவதைகள் கூட்டமாக கும்மி அடித்தது.., தேன்மொழியை பார்த்த பொது கூட அவன் இவ்வளவு பூரிப்பு அடையவில்லை.
ஆனால்........................! அடுத்து வந்தது ஆப்பு
No comments:
Post a Comment