எங்கோ கேட்டது வேட்டுச்சத்தம்..!
குமரன் பள்ளியின் வாசல் வந்து
பதறி விழுந்து பிணமாய் கிடந்தான்..!
எங்கோ ஒரு தாய் பிள்ளையை இழந்து
உலகமே அதிர்வதாய் கதரித்துடித்தாள்..!
அக்காள் வளர்த்த ஆவாரம் தோட்டத்திலே
சருகாய் உலர்ந்து, நினைவை இழந்து..,
சிறு பிள்ளையின் மேனி போல் பால்ய
உடுப்புடன், கடைசி முனங்களிலும் கடவுளை சபித்து விட்டு,
அப்படியே இறந்து போனாள்...!
கண்ணன் வாத்தியார் கால்வாய்க்குள் கிடந்தார்,
கை வேறு கால் வேறாய்..!
எதிர்வீட்டு தாத்தாவின் கைத்தடியும்,
கண்ணாடியும் சுக்கலாய் கிடக்கிறது..!
செத்தது அத்தனையும் என் இனத்தார் என தெரிந்தும்
ஒன்றும் செய்யவில்லை.., செய்வதற்கும் வக்கில்லை..!
நம் தாய் தமிழர் செய்ததெல்லாம் ஒரு துளி கண்ணீரும்.., ஒரு பக்க கவிதையும் தான்..!
No comments:
Post a Comment