Monday, September 19, 2011

krishnaveni panjaalai

கிருஷ்ணவேணி பஞ்சாலை, 1980களின் தமிழ் மக்கள் வாழ்வின் ஒரு பதிவு. அந்த காலத்தில் எல்லோராலும் ஆசையோடும், ஏக்கத்தோடும், ஆச்சர்யத்தோடும் பார்க்கப்பட்ட மில் தொழிலாளர்களன் வாழ்கையை மயமாக கொண்டது இந்த திரைப்படம். ஒரு பஞ்சாலையில் நிகழும் இனிமையான காதலால் இதமாக இதயங்களை வருட வருகிறது கிருஷ்ணவேணி பஞ்சாலை. அழகான காதலோடு மில் தொழிலாளர்களின் வாழ்வில் இருக்கும் சுகங்களையும், சோகங்களையும், சந்தோஷத்தையும், வலிகளையும் இந்த படத்தில் சரியான விகிதத்தில் பதிவு செய்திருகிறார்கள். இதுவரை நாம் கண்டறியாத கதை களத்தையும், மனிதர்களையும், வாழ்க்கை முறையையும் நமக்காக விரைவில் திரையில் கொண்டுதர இருக்கிறது இந்த கிருஷ்ணவேணி பஞ்சாலை. 

     இத்திரைபடத்தை எழுதி இயக்கி இருக்கிறார் தனபால் பத்மநாபன். முதல் முறையாக தமிழ் திரையுலகில் மாணவர்களை கொண்டு மக்களிடம் படத்தை விளம்பரம் செய்யும் புதிய யுக்தியை இதில் கேட்டிகாரதனமாக கையாண்டிருகிறார்கள்.  மொத்தத்தில் படத்தின் ஒவ்வொரு படியிலும் புதுமை மிளிர்கிறது. சுருக்கமாக 80 களின் உன்னதமான ஒரு காதலை பஞ்சாலை பின்னியில் சொல்லியிருகிறார்கள் இந்த கிருஷ்ணவேணி பஞ்சாலையில்.

Friday, January 21, 2011

siruthai

மறுபடியும் ஒரு போலீஸ் கதை.., தெலுங்கு கோங்குராவை நம்ம ஊரு ஊறுகாயாக பரிமாறி இருக்கிறார்கள். அதுவும் ருசியாகதான் இருக்கிறது. கார்த்தியின் சினிமா பயணத்தில் சிறுத்தை கண்டிப்பாக ஏற்றம் தான்.
               தெலுங்கு விக்ரமகுடுவை தமிழில் சிறுத்தையாக சீரவிட்டிருகிறார் இயக்குனர் சிவா. கதையும் களமும் தமிழுக்கு புதிதல்ல என்றாலும் கொஞ்சம் திரை கதையில் புதுமையை புகுத்த முயற்சித்ததற்கு பாராட்டுக்கள்.
                ராக்கெட் ராஜா (கார்த்தி) ஒரு அனாதை  திருடன் அவனுகென்று இருப்பதெல்லாம் நண்பன் காட்டுபூச்சி(சந்தானம்) மட்டுமே. இருவரும் சேர்ந்து திருட்டு தொழிலை ஜோராக செய்து வரும் வேலையில் கார்த்தி ஒரு பெண்ணை பார்த்து மனதை தொலைக்கிறார். அவர்களது காதல்., கனவு பாடல் என போகிற கதையில் திடிரென்று கார்த்தியின் கையில் கிடைக்கிறது ஒரு குழந்தை.., அவரை அப்பா என்று அலைகிறது. குழந்தைகளே பிடிக்காத கார்த்தி கொஞ்சம் கொஞ்சமாக அந்த குழந்தையை நேசிக்க ஆரம்பிக்கிறார். இதனால் காதலி தமனா அவரை விட்டு பிரிகிறார். கார்த்தியை கொல்ல துரத்துகிறது ஒரு கும்பல்.., திடிரென்று அங்கு அசத்தல் entry தந்து அந்த கும்பலை ரணகளம் செய்கிறார் இன்னும் ஒரு கார்த்தி. ரத்னவேல் பாண்டியன் I.P.S. அவரும் இறந்து போகவே அவரது falsh back கேட்டுவிட்டு அவரது எதிரிகளை வெல்ல ரத்னவேல் பாண்டியன் வேடம் ஏற்கிறார் ராக்கெட் ராஜா.
                     முன் பாதியில் காமெடி கலை காட்டியிருக்கிறது.., சந்தானம் நிச்சயமாக இன்னொரு ஹீரோ. பின் பாதியில் ரத்னவேல் பாண்டியனின் அறிமுகத்துக்கு பின் வெறும் action அதகளம் தான் என்று நினைத்தால் அதை பொய்யாக்கி காமெடி சரவெடி கொளுத்தி இருகிறார்கள். பின்பாதியில் சந்தானத்தின் என்ட்ரி நிமிர வைக்கிறது. ரத்னவேல் பாண்டியனாக வேடம் ஏற்றபின் ராக்கெட் ராஜா ரத்னவேல் பண்டியானகவே மாறிவிடாமல் அவரது originalityai maintain செய்திருப்பது பெரிய ஆறுதல். போலீஸ் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டும் அத்தனை பெரிய ரௌடிக்களை இவர் இத்தனை சுலபமாக வீழ்த்துவது கொஞ்சம் ஓவர். வில்லன்களின் அறிவுக்குள் தெலுங்கு வாடை அதிகமாக வீசுவதை தவிர்த்திருக்கலாம்.
                     கார்த்தி ராக்கெட் ராஜாவாகவும் ரத்தினவேல் பண்டியானகவும் சரியாக செய்திருக்கிறார். அந்த போலீஸ் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப்போகிறார். எந்த இடத்திலேயும் அன்பு செல்வனையோ இல்லை துரைசிங்கதையோ நினைவூட்டி விட கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். அதற்க்கு தனி பாராட்டுக்கள்.
                   தமனா படத்துக்கு ஆண் ரசிகர் படலத்தை இழுப்பதற்கு மட்டுமே உதவுகிறார் மற்றபடி அவருக்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை. இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம். சந்தனத்துக்கு கண்டிப்பாக கை கொடுத்தே ஆகவேண்டும் பல இடங்களில் படத்தை தூக்கி நிறுத்துகிறார்.
                 வித்யா சாகர் இசையில் பாடல்கள் எல்லாமே சுமார் ரகம். கேமரா கோணங்கள் நன்றாகதான் இருக்கின்றன.
                  மும் பாதியில் காட்டிய கவனத்தை இயக்குனர் பின் பாதியிலும் காட்டி இருக்கலாம். கொஞ்சம் மசாலா ஓவராகி விட்டதால் அவ்வபோது திகட்டுகிறது.
சிறுத்தை - இன்னும் கொஞ்சம் சத்தமாக சீறி இருக்கலாம்.
       

aadukalam

ஆடுகளம் என்றதும் எதோ கிரிக்கெட்டோ, பூட்பாலோ ஆட போகிறார்கள் என்று பார்த்தல் சற்றும் எதிர்பாராத விதமாக நம் பண்டைய கலையாகிய செவக்கட்டில் ஆட்டத்தை கிளப்பியிருக்கிறார்கள். இயக்குனர் வெற்றிமாறன் என்றதுமே ஏதோ புதிதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை பொய்க்காமல் இருந்ததற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ். படத்தின் களம் தமிழ் சினிமாவிற்கு புதிது. கதை இதுதான்..,
                   பேட்டைக்காரன் (ஜெயபாலன்) செவக்கட்டில் வித்தகர்.., அவரை ஜெயிப்பதற்கு மதுரை ஜில்லாவிலேயே ஆள் கிடையாது.., அவரது சேவல்களை அத்தனை லாவகமாக தயார் செய்கிறார். அவரது சீடர்களில் மிகவும் முக்கியமானவர்கள் கருப்பும் (தனுஷ்) துறையும் (கிஷோர்). துரை சிறியதாக ஒரு wine shop வைத்திருக்கிறார்.., கருப்புக்கு செவகட்டை விட்டால் வேறு தொழில் இருப்பதாக தெரியவில்லை. பேட்டைகாரனின் எதிர் அணி ரத்னசுவாமி போலீஸ்.., இவரது லட்சியம் பேட்டைகாரனை ஒரு முறையாவது ஜெயித்து விடுவது.அதற்காக பலமுறை முயன்றும் முடியவில்லை.         
     பயிற்சியில் தேரத கருப்பின் சேவலை அறுக்குமாறு பேட்டைக்காரன் சொல்லியும் அதை அறுக்காமல் வளர்த்து வருகிறான் கருப்பு.., அந்த சேவலை வைத்து மிக முக்கியமான போட்டியையும் ரத்னசுவாமியையும் ஜெயித்தும் விடுகிறான். இது பேட்டைகாரனின் ஈகோவை துண்டிவிடவே ஆரம்பமாகிறது அதகளம். இதன் பிறகு கோபம்.., குரோதம்.., துரோகம்.., சூழ்ச்சி என பயணிக்கிறது கதை.
                   வெற்றிமாறனின் தைரியத்துக்கு முதலில் பாராட்டுக்கள். சேவல்கட்டு  என்பது வெறும் கிராமத்தினரின் பொழுது போக்கு என்று நினைக்கும் நகரத்தார்களுக்கு அதன் பின் இருக்கும் உழைப்பையும், வாழ்கையையும் அருமையாக காட்டி இருக்கிறார். இது போன்ற களங்கள் நிச்சயம் நமக்கு புதிது. அவரின் ஸ்டார் காஸ்டிங் மிக அருமை. யாருக்கு எது பொருந்தும் என்று மிக சரியாக தேர்வு செய்திருக்கிறார். 
                   தனுஷுக்கும் இது புதிய களம். சென்னைகாரராக இருந்தாலும் பேச்சிலும் body languageilum ஆச்சு அசல் மதுரை இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். நிறைய உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஒரு commercial ஹீரோவாக எல்லா பெயரும் இருந்தும் கதையில் ஒரு முக்கிய கதபாத்திரமாக மட்டுமே வளம் வர ஒப்புகொண்டதற்காக ஒரு தனி சபாஷ். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கே.பி.கருப்பு  தான் தெரிகிறார். 
                   படத்தின் முன் பாதியில் பாடல்களுக்காகவும்.., காதலுக்காகவும் வந்து போகிறார் tapsee. கதையில் பெரிய பங்கு இல்லாவிடிலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆங்கிலோ இந்திய பெண்ணாகிய அவருடன் தனுஷ் காதலுக்காக அடிக்கும் லூட்டிகள் பலே ராகம்..,என்ன.., அப்போதும் தனுஷ் தான் ஸ்கோர் செய்கிறார்.
                    பேட்டைக்காரன் கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வு எழத்தாளர் ஜெயபாலன் பட்டையை கிளப்பியிருக்கிறார் . கிஷோரின் நடிப்பும் "அட" சொல்லவைக்கிறது.

                    g.v.prakash இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. இளைஞர்களின்  லேட்டஸ்ட் ரிங்டோன்கள் ஆடுகளம் பாடல்கள் தான். அய்யய்யோ பாடலில் கரைந்து உருக வைக்கிறார் S.P.B. யாத்தே யாத்தே பாடலுக்கும், ஓத்த சொல்லல பாடலுக்கும் தியேட்டரில் தீபாவளி. யாத்தே யாத்தே படலை அழகான மதுரை தமிழில் தந்ததற்காக கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
                     பல நாட்களுக்கு பிறகு அசலான மதுரையை சுட்டிருக்கிறது கேமரா.., மதுரையின் சந்துக்களை இவ்வளவு நேர்த்தியாக யாரும் காட்டியதாக தெரியவில்லை.
                    ஆனால் தனக்கு இவ்வளவு துரோகம் செய்து, பெற்ற தாயின் இறப்புக்கு காரணமானவரை மன்னித்து அவர் மானத்தை காப்பாற்ற கருப்பு நினைப்பது ஏன்?
                    எது எப்படியோ இது நிச்சயம் புதிய பாராட்டத்தக்க முயற்சி.
ஆடுகளம் - சதம் அடித்திருகிறார்கள்.

Friday, January 14, 2011

 அழகான பூ போல.., நிலையான வின் போல.., இன்பங்கள் என்றென்றும்.., நம் வாழ்வில்  பொங்கிட.., தமிழ் மரபுக்கு சான்றாக.., எங்கள் உழவுக்கு வாழ்த்தாக.., தமிழர் இனம் போன்றும் தினமான  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Monday, January 3, 2011

நீ என்னை பார்த்தாய்..! நான் எங்கோ பார்த்தேன்..!
என்னை கடந்து செல்லும் போதெல்லாம் என் பார்வைக்காக
நீ ஏங்கினாய் என்பதை உன் கண்களே காட்டிகொடுத்தது..!
இருந்தும் நான் இரகமில்லாதவளாய் மண்ணையும் விண்ணையும் பார்த்தே நடந்தேன்..!
நீ எனக்காக தவற விட்டுச்சென்ற கடிதங்களை
கண்டுகொள்ளாமல் வெறும் காகிதமாய் தூக்கி ஏரிந்தேன்
ஏனோ தெரியவில்லை உன்னை நினைக்கும்போதெல்லாம் கர்வம் கொண்டேன்..!
நீ என்ன நினைத்தாயோ என்னை பற்றி..,
எத்தனை தடவை திட்டினாயோ என்னை..,
ஆனால் நான் இன்னமும் சொல்லிகொண்டுதானிருகிறேன்
என் காதலை நீ சென்ற பின்பும் உன் காலடி பதிந்திருக்கும் நிலத்திடம்..!

Friday, December 10, 2010

MOVIE REVIEW - NANDHALALA

நந்தலாலா
      உறங்கிக்கொண்டிருக்கும் இதயங்களை எழுப்பிவிடும் தாலாட்டு.
.

Tuesday, December 7, 2010

எங்கோ கேட்டது வேட்டுச்சத்தம்..!
குமரன் பள்ளியின் வாசல் வந்து
பதறி விழுந்து பிணமாய் கிடந்தான்..!
எங்கோ ஒரு தாய் பிள்ளையை இழந்து
உலகமே அதிர்வதாய் கதரித்துடித்தாள்..!
அக்காள் வளர்த்த ஆவாரம் தோட்டத்திலே 
சருகாய் உலர்ந்து, நினைவை இழந்து..,
சிறு பிள்ளையின் மேனி போல் பால்ய
உடுப்புடன், கடைசி முனங்களிலும் கடவுளை சபித்து விட்டு,
அப்படியே இறந்து போனாள்...!
கண்ணன் வாத்தியார் கால்வாய்க்குள் கிடந்தார்,
கை வேறு கால் வேறாய்..!
எதிர்வீட்டு தாத்தாவின் கைத்தடியும்,
கண்ணாடியும் சுக்கலாய் கிடக்கிறது..!
செத்தது அத்தனையும் என் இனத்தார் என தெரிந்தும்
ஒன்றும் செய்யவில்லை.., செய்வதற்கும் வக்கில்லை..!
நம் தாய் தமிழர் செய்ததெல்லாம் ஒரு துளி கண்ணீரும்.., ஒரு பக்க கவிதையும் தான்..!