Friday, January 21, 2011

aadukalam

ஆடுகளம் என்றதும் எதோ கிரிக்கெட்டோ, பூட்பாலோ ஆட போகிறார்கள் என்று பார்த்தல் சற்றும் எதிர்பாராத விதமாக நம் பண்டைய கலையாகிய செவக்கட்டில் ஆட்டத்தை கிளப்பியிருக்கிறார்கள். இயக்குனர் வெற்றிமாறன் என்றதுமே ஏதோ புதிதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை பொய்க்காமல் இருந்ததற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ். படத்தின் களம் தமிழ் சினிமாவிற்கு புதிது. கதை இதுதான்..,
                   பேட்டைக்காரன் (ஜெயபாலன்) செவக்கட்டில் வித்தகர்.., அவரை ஜெயிப்பதற்கு மதுரை ஜில்லாவிலேயே ஆள் கிடையாது.., அவரது சேவல்களை அத்தனை லாவகமாக தயார் செய்கிறார். அவரது சீடர்களில் மிகவும் முக்கியமானவர்கள் கருப்பும் (தனுஷ்) துறையும் (கிஷோர்). துரை சிறியதாக ஒரு wine shop வைத்திருக்கிறார்.., கருப்புக்கு செவகட்டை விட்டால் வேறு தொழில் இருப்பதாக தெரியவில்லை. பேட்டைகாரனின் எதிர் அணி ரத்னசுவாமி போலீஸ்.., இவரது லட்சியம் பேட்டைகாரனை ஒரு முறையாவது ஜெயித்து விடுவது.அதற்காக பலமுறை முயன்றும் முடியவில்லை.         
     பயிற்சியில் தேரத கருப்பின் சேவலை அறுக்குமாறு பேட்டைக்காரன் சொல்லியும் அதை அறுக்காமல் வளர்த்து வருகிறான் கருப்பு.., அந்த சேவலை வைத்து மிக முக்கியமான போட்டியையும் ரத்னசுவாமியையும் ஜெயித்தும் விடுகிறான். இது பேட்டைகாரனின் ஈகோவை துண்டிவிடவே ஆரம்பமாகிறது அதகளம். இதன் பிறகு கோபம்.., குரோதம்.., துரோகம்.., சூழ்ச்சி என பயணிக்கிறது கதை.
                   வெற்றிமாறனின் தைரியத்துக்கு முதலில் பாராட்டுக்கள். சேவல்கட்டு  என்பது வெறும் கிராமத்தினரின் பொழுது போக்கு என்று நினைக்கும் நகரத்தார்களுக்கு அதன் பின் இருக்கும் உழைப்பையும், வாழ்கையையும் அருமையாக காட்டி இருக்கிறார். இது போன்ற களங்கள் நிச்சயம் நமக்கு புதிது. அவரின் ஸ்டார் காஸ்டிங் மிக அருமை. யாருக்கு எது பொருந்தும் என்று மிக சரியாக தேர்வு செய்திருக்கிறார். 
                   தனுஷுக்கும் இது புதிய களம். சென்னைகாரராக இருந்தாலும் பேச்சிலும் body languageilum ஆச்சு அசல் மதுரை இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். நிறைய உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஒரு commercial ஹீரோவாக எல்லா பெயரும் இருந்தும் கதையில் ஒரு முக்கிய கதபாத்திரமாக மட்டுமே வளம் வர ஒப்புகொண்டதற்காக ஒரு தனி சபாஷ். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கே.பி.கருப்பு  தான் தெரிகிறார். 
                   படத்தின் முன் பாதியில் பாடல்களுக்காகவும்.., காதலுக்காகவும் வந்து போகிறார் tapsee. கதையில் பெரிய பங்கு இல்லாவிடிலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆங்கிலோ இந்திய பெண்ணாகிய அவருடன் தனுஷ் காதலுக்காக அடிக்கும் லூட்டிகள் பலே ராகம்..,என்ன.., அப்போதும் தனுஷ் தான் ஸ்கோர் செய்கிறார்.
                    பேட்டைக்காரன் கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வு எழத்தாளர் ஜெயபாலன் பட்டையை கிளப்பியிருக்கிறார் . கிஷோரின் நடிப்பும் "அட" சொல்லவைக்கிறது.

                    g.v.prakash இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. இளைஞர்களின்  லேட்டஸ்ட் ரிங்டோன்கள் ஆடுகளம் பாடல்கள் தான். அய்யய்யோ பாடலில் கரைந்து உருக வைக்கிறார் S.P.B. யாத்தே யாத்தே பாடலுக்கும், ஓத்த சொல்லல பாடலுக்கும் தியேட்டரில் தீபாவளி. யாத்தே யாத்தே படலை அழகான மதுரை தமிழில் தந்ததற்காக கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
                     பல நாட்களுக்கு பிறகு அசலான மதுரையை சுட்டிருக்கிறது கேமரா.., மதுரையின் சந்துக்களை இவ்வளவு நேர்த்தியாக யாரும் காட்டியதாக தெரியவில்லை.
                    ஆனால் தனக்கு இவ்வளவு துரோகம் செய்து, பெற்ற தாயின் இறப்புக்கு காரணமானவரை மன்னித்து அவர் மானத்தை காப்பாற்ற கருப்பு நினைப்பது ஏன்?
                    எது எப்படியோ இது நிச்சயம் புதிய பாராட்டத்தக்க முயற்சி.
ஆடுகளம் - சதம் அடித்திருகிறார்கள்.

No comments:

Post a Comment