நீ என்னை பார்த்தாய்..! நான் எங்கோ பார்த்தேன்..!
என்னை கடந்து செல்லும் போதெல்லாம் என் பார்வைக்காக
நீ ஏங்கினாய் என்பதை உன் கண்களே காட்டிகொடுத்தது..!
இருந்தும் நான் இரகமில்லாதவளாய் மண்ணையும் விண்ணையும் பார்த்தே நடந்தேன்..!
நீ எனக்காக தவற விட்டுச்சென்ற கடிதங்களை
கண்டுகொள்ளாமல் வெறும் காகிதமாய் தூக்கி ஏரிந்தேன்
ஏனோ தெரியவில்லை உன்னை நினைக்கும்போதெல்லாம் கர்வம் கொண்டேன்..!
நீ என்ன நினைத்தாயோ என்னை பற்றி..,
எத்தனை தடவை திட்டினாயோ என்னை..,
ஆனால் நான் இன்னமும் சொல்லிகொண்டுதானிருகிறேன்
என் காதலை நீ சென்ற பின்பும் உன் காலடி பதிந்திருக்கும் நிலத்திடம்..!
No comments:
Post a Comment