மறுபடியும் ஒரு போலீஸ் கதை.., தெலுங்கு கோங்குராவை நம்ம ஊரு ஊறுகாயாக பரிமாறி இருக்கிறார்கள். அதுவும் ருசியாகதான் இருக்கிறது. கார்த்தியின் சினிமா பயணத்தில் சிறுத்தை கண்டிப்பாக ஏற்றம் தான்.
தெலுங்கு விக்ரமகுடுவை தமிழில் சிறுத்தையாக சீரவிட்டிருகிறார் இயக்குனர் சிவா. கதையும் களமும் தமிழுக்கு புதிதல்ல என்றாலும் கொஞ்சம் திரை கதையில் புதுமையை புகுத்த முயற்சித்ததற்கு பாராட்டுக்கள்.
ராக்கெட் ராஜா (கார்த்தி) ஒரு அனாதை திருடன் அவனுகென்று இருப்பதெல்லாம் நண்பன் காட்டுபூச்சி(சந்தானம்) மட்டுமே. இருவரும் சேர்ந்து திருட்டு தொழிலை ஜோராக செய்து வரும் வேலையில் கார்த்தி ஒரு பெண்ணை பார்த்து மனதை தொலைக்கிறார். அவர்களது காதல்., கனவு பாடல் என போகிற கதையில் திடிரென்று கார்த்தியின் கையில் கிடைக்கிறது ஒரு குழந்தை.., அவரை அப்பா என்று அலைகிறது. குழந்தைகளே பிடிக்காத கார்த்தி கொஞ்சம் கொஞ்சமாக அந்த குழந்தையை நேசிக்க ஆரம்பிக்கிறார். இதனால் காதலி தமனா அவரை விட்டு பிரிகிறார். கார்த்தியை கொல்ல துரத்துகிறது ஒரு கும்பல்.., திடிரென்று அங்கு அசத்தல் entry தந்து அந்த கும்பலை ரணகளம் செய்கிறார் இன்னும் ஒரு கார்த்தி. ரத்னவேல் பாண்டியன் I.P.S. அவரும் இறந்து போகவே அவரது falsh back கேட்டுவிட்டு அவரது எதிரிகளை வெல்ல ரத்னவேல் பாண்டியன் வேடம் ஏற்கிறார் ராக்கெட் ராஜா.
முன் பாதியில் காமெடி கலை காட்டியிருக்கிறது.., சந்தானம் நிச்சயமாக இன்னொரு ஹீரோ. பின் பாதியில் ரத்னவேல் பாண்டியனின் அறிமுகத்துக்கு பின் வெறும் action அதகளம் தான் என்று நினைத்தால் அதை பொய்யாக்கி காமெடி சரவெடி கொளுத்தி இருகிறார்கள். பின்பாதியில் சந்தானத்தின் என்ட்ரி நிமிர வைக்கிறது. ரத்னவேல் பாண்டியனாக வேடம் ஏற்றபின் ராக்கெட் ராஜா ரத்னவேல் பண்டியானகவே மாறிவிடாமல் அவரது originalityai maintain செய்திருப்பது பெரிய ஆறுதல். போலீஸ் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டும் அத்தனை பெரிய ரௌடிக்களை இவர் இத்தனை சுலபமாக வீழ்த்துவது கொஞ்சம் ஓவர். வில்லன்களின் அறிவுக்குள் தெலுங்கு வாடை அதிகமாக வீசுவதை தவிர்த்திருக்கலாம்.
கார்த்தி ராக்கெட் ராஜாவாகவும் ரத்தினவேல் பண்டியானகவும் சரியாக செய்திருக்கிறார். அந்த போலீஸ் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப்போகிறார். எந்த இடத்திலேயும் அன்பு செல்வனையோ இல்லை துரைசிங்கதையோ நினைவூட்டி விட கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். அதற்க்கு தனி பாராட்டுக்கள்.
தமனா படத்துக்கு ஆண் ரசிகர் படலத்தை இழுப்பதற்கு மட்டுமே உதவுகிறார் மற்றபடி அவருக்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை. இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம். சந்தனத்துக்கு கண்டிப்பாக கை கொடுத்தே ஆகவேண்டும் பல இடங்களில் படத்தை தூக்கி நிறுத்துகிறார்.
வித்யா சாகர் இசையில் பாடல்கள் எல்லாமே சுமார் ரகம். கேமரா கோணங்கள் நன்றாகதான் இருக்கின்றன.
மும் பாதியில் காட்டிய கவனத்தை இயக்குனர் பின் பாதியிலும் காட்டி இருக்கலாம். கொஞ்சம் மசாலா ஓவராகி விட்டதால் அவ்வபோது திகட்டுகிறது.
சிறுத்தை - இன்னும் கொஞ்சம் சத்தமாக சீறி இருக்கலாம்.

No comments:
Post a Comment