கிருஷ்ணவேணி பஞ்சாலை, 1980களின் தமிழ் மக்கள் வாழ்வின் ஒரு பதிவு. அந்த காலத்தில் எல்லோராலும் ஆசையோடும், ஏக்கத்தோடும், ஆச்சர்யத்தோடும் பார்க்கப்பட்ட மில் தொழிலாளர்களன் வாழ்கையை மயமாக கொண்டது இந்த திரைப்படம். ஒரு பஞ்சாலையில் நிகழும் இனிமையான காதலால் இதமாக இதயங்களை வருட வருகிறது கிருஷ்ணவேணி பஞ்சாலை. அழகான காதலோடு மில் தொழிலாளர்களின் வாழ்வில் இருக்கும் சுகங்களையும், சோகங்களையும், சந்தோஷத்தையும், வலிகளையும் இந்த படத்தில் சரியான விகிதத்தில் பதிவு செய்திருகிறார்கள். இதுவரை நாம் கண்டறியாத கதை களத்தையும், மனிதர்களையும், வாழ்க்கை முறையையும் நமக்காக விரைவில் திரையில் கொண்டுதர இருக்கிறது இந்த கிருஷ்ணவேணி பஞ்சாலை.
இத்திரைபடத்தை எழுதி இயக்கி இருக்கிறார் தனபால் பத்மநாபன். முதல் முறையாக தமிழ் திரையுலகில் மாணவர்களை கொண்டு மக்களிடம் படத்தை விளம்பரம் செய்யும் புதிய யுக்தியை இதில் கேட்டிகாரதனமாக கையாண்டிருகிறார்கள். மொத்தத்தில் படத்தின் ஒவ்வொரு படியிலும் புதுமை மிளிர்கிறது. சுருக்கமாக 80 களின் உன்னதமான ஒரு காதலை பஞ்சாலை பின்னியில் சொல்லியிருகிறார்கள் இந்த கிருஷ்ணவேணி பஞ்சாலையில்.
No comments:
Post a Comment