சில நேரங்களில் ஏதோ சிலர்
ரயில் பயணங்களின் கடந்து செல்லாத நிமிடங்களின்
நிசப்தங்களை நிறைவு செய்ய, என்னென்னவோ பேசி,
எதையெதையோ அலசி ஆராய்ந்து,
கதைகள் பல சொல்லி,
கவிதைகள் பாடி,
என்னை பற்றி அவன் அறிந்து.., அவன் சரித்திரம் முழுவதும் என்னிடம் பிட்டு வைத்து
என் ஒன்று விட்ட சித்தப்பா மகள் கணவரின்
தம்பி மனைவியின் அண்ணன் மகன் தான் நீ.., சுத்தி சுத்தி ஒன்னுக்குள்ள ஒன்னு
என்று அங்கலாய்த்து..,
அடுத்த ஊரில் இறங்கி காணாமல் போவார்கள்..!
மறுபடி ஒருமுறை பார்ப்போமா தெரியாது..!
பார்த்தாலும் தெரியாது..!
இருப்பினும்
எத்தணை எத்தனை பேச்சுக்கள்..,
எத்தனை எத்தனை சிரிப்புக்கள்.!
இன்னமும் சொல்லப்போனால் வாழ்கை பயணத்தில் கூட
சிலர் இப்படி தான்..!
என்றும் சுவடுகளாய் நினைவுகள் தந்து எங்கோ
விலகிசெல்கிறார்கள்..!
ஒன்றாய் அமர்ந்து.., கண்ணீர் துளி பரிமாறி
நீயன்றி நான் இல்லை, இதயம் இடம் மாறி
இன்னும் ஒரு நூறு வருடங்கள் ஒன்றாக வாழ்வதென
கனவுகள் பல கண்டு ..,
கவிதைகள் பரிமாறி,
கைகோர்த்து மணல் வெளியில் கால் பாதம் பதித்து விட்டு,
தோள்களில் சாய்ந்தபடி முழுமதியை ரசித்துகிடந்து,
எத்தனையோ பேச்சுக்கள் அக்கு அக்காய் பிரித்து போட்டு,
குறுஞ்செய்தி வழிந்தோடி கைபேசி நிறைத்துவிட்டு,
பேசாத நாள் எல்லாம் நகராத நிலமாகி,
எதோ ஒரு நாள்
ஒரு சிறு பூசலுக்காய்
கல்லுக்கு கலைந்தோடும் காக்கை கூட்டமென
நினைவுகள் சிதறி தெறிக்க..,நல்லதெல்லாம் மறந்து விட்டு..,
உன் நினைவுகள் நரகமென..,
ஒரு நாழிகையில் முடிவு செய்து..,
அழகிய நினைவுகளை சுட்டெரித்து சாம்பலாக்கி
அந்த சாம்பலிலும் கங்காக நடந்து விட்ட தவறை மட்டும்
நீருற்றி புகைக்க வைத்து !
எத்தனை பேச்சுக்கள்.., எத்தனை வசந்தங்கள்..,
எத்தனை கவிதைகள்.., எத்தனை கோபங்கள்..,
எத்தனை தாபங்கள், கனவுகள், கழவுகள், மெய்கள்,பொய்கள்,
சண்டைகள், முத்தங்கள், தவிப்புகள்..!
சாம்பலின் போனிக்ஸ் போல் அத்தனையும் எழுந்தாலும்
ஒரு நொடியில் பொய் எனவும் ,
நிழலேன்றும் ,
நடிப்பேன்றும்.., மறந்துவிட்டு
எங்கெங்கோ செல்கின்றோம் .
எத்தணை நாள் கழிந்தாலும்..!
கண்ணின் மை கலைந்து காதோரம் வந்தபின்பும்
எதோ ஒரு ஓரத்தில் என்றைக்கும் சிறு பொறியாய் அந்த ஞாபகங்கள் நிலைத்திருக்கும்..!
மீண்டும் ஒரு நாள் நாம் சந்திக்க நேர்ந்தாலும்
அந்த அந்தி மாலை பொழுதும்..,
நம் முதல் வார்த்தையும்..,
நான் சொன்ன காதலும்..,
அந்த புத்தகமும்..,
கண்ணாடியும்..,
மரமும்.., மார்கழி மலரும்,
பச்சை வயலும்..,
நம் தோழமை தூறலும்..,
கல்லின் சிலைகளும்..,
மிட்டாயும்.., கத்தியும்..,
கவிதையும்., பேனாவும்..,
காதல் சிலையும்..,
அத்தணையும் நெஞ்சோடு
ஒரு நொடியில் வழிந்தோடும்..,
திரை மீது நிழலாடும் பிம்பங்கள்
போல நம்முள் நினைவெல்லாம் அலைந்தோடும்..,
இதழ்கள் ஊமையாக..,
இதயம் கனத்துப்போக..,
கண்களின் ஒரு துளி நீர் மட்டும்
சொல்லாமல்
சொல்லிவிடும்
நாம் அன்று சொல்லாத
உணர்வை மட்டும்..!
அந்த நிசம்ப்த பேச்சுக்களில்..,
என் உயிருக்குள் உருண்டிருக்கும் ..,
உன்னை நினைத்திருந்த பொழுதுகளும்..,
அத்தனையும் கழிந்த பின்பும் எங்கோ ஒரு ஓரத்தில்
எட்டாமல் கிடந்திருக்கும் நாம் விட்டு சென்ற
உறவு மட்டும்.
Sunday, November 21, 2010
Tuesday, November 16, 2010
ENGAE AVAL?
"காலை எழுந்தாச்சு என்னைக்கும் போல இன்னைக்கும் ஒவ்வொரு கம்பெனியா அலைய வேண்டியதுதான்". விடியும்போதே சலித்து கொண்டான் கணேஷ் பாரதி @ கணேசன். "கவலை படாத டா காலங்காத்தால சலிச்சுக்காத .., போ போய் வேலைய பாரு" இது ஷங்கர் கணேசனின் தோழன், சில சமயம் எதிரி, பல சமயங்களில் வங்கி, ஆபத்பாண்டவன் இப்படி பல அவதாரங்கள் இவனுக்கு. கணேசனுக்கு மதுரை பக்கம் ஊரு.., இங்க சினிமா வாய்ப்பு தேடி வந்து வருஷம் நாலு முடிஞ்சாச்சு.., இது வர 5 படங்கள்ல உதவி இயக்குனரா வேலை பாத்தாச்சு, இப்ப சொந்தமா படம் எடுக்க ஒவ்வொரு பட கம்பெனியா ஏறி இறங்குறான். கணேசன் குடும்பம் ஊர்ல நல்ல வசதியான குடும்பம் தான்.., அப்பா சொந்தமா அரிசி மண்டி வச்சுருக்காரு.., பய மண்டிய பாக்காம கலைய வழக்குரேன் கழுதைய வழக்குரேன்னு திரியுராநேனு அவருக்கு வருத்தம், ஒரு கலைஞன அரிசி மண்டில அடைக்க பாக்குராரேனு கணேசனுக்கு வருத்தம். பொட்டிய கட்டிட்டு பட்டணம் வந்துட்டான்.
கணேசனுக்கு தமிழ் சினிமாவுல இது வர யாருமே சரியான காதல் கதை ஒன்னு சொல்லலன்னும் அந்த குறைய தன்னால மட்டும் தன் தீத்து வைக்க முடியும்னு அசைக்க முடியாத நம்பிக்கை. அப்பப்ப சொல்லிக்குவான் "ச்சா, ஒரு டைட்டானிக், ஒரு ரோமன் ஹாலிடே மாதிரி படங்கள நம்ம தமிழ் மக்கள் எப்ப தான் பாக்க போராங்களோ.., அவுங்களுக்கு அந்த குறைய தீத்து வைக்கணும்டா, அதுக்காகவாச்சும் நான் படம் எடுக்கணும் பங்காளி".
கணேசனுக்கு காதல் படம் மட்டும் தான் எடுக்கனும்ன்குற உயர்ந்த லட்சியம் வர காரணம் தேனு அதான் அவன் ஊரு போஸ்ட் மாஸ்டர் பொண்ணு தேன் மொழி. தேன் மொழி குடும்பம் கணேசன் ஊருக்கு குடிவரும்போது அவனுக்கு பதினெட்டு வயசு இருக்கும். மூணாவது முறையா பிளஸ் டூ படிச்சுட்ருந்தான். தேனு அவன் கிளாஸ் தான், பாவம் பட்டணத்துல படிச்ச புள்ள இப்ப இந்த கிராமத்து பள்ளி கூடத்துல கஷ்ட படுதேன்னு கணேசன் மனசு தாங்கல. தேனுக்கு எல்லா உதவியும் மாஞ்சு மாஞ்சு செஞ்சான். ஆனா அது உதவி இல்ல உபத்திரவம்னு தேனுக்கு அப்ப புரியல, பாவம். தேன பாத்ததுமே கணேசன் மனசுக்குல ஆயிரம், இல்ல இல்ல கோடி பட்டம் பூச்சி பறக்க ஆரம்பிச்சுடும்.., இளையராஜாவும் எம். எஸ். வி யும் சேந்து மனசுக்குல ஒரு சங்கீத மஹா யுத்தமே நடத்திருவாங்க.
"இவ்வளவு இருந்து என்ன அந்த புள்ள கிட்ட சொல்ல வக்கிலயே டா உனக்கு" என்று கணேசனின் உயிர் நண்பர்கள் அவனை மட்டைய கட்டி இறக்கி விட , ஒரு நல்ல நாள்ல தேனு கிட்ட சொல்லிரதுன்னு இறங்கினான். கஷ்டப்பட்டு வராததெல்லாம் முயற்சி பண்ணி கவிதையா எழுதினான் ஒரு கடிதம்.
அன்பே தேனு
உன் கண்ணு கரு மீனு
என் மனச பறிச்சுட்ட நீனு
வந்து சம்மதம் சொல்லு என் கண்ணு
நண்பன் ராசு கஷ்டப்பட்டு எழுதித்தந்த கவிதையோட தேன்மொழிய சந்திச்சான். அன்னைக்கு தான் அவன் வாழ்க்கைலயே மிக பெரிய திருப்பம் நடந்த நாள். தேனு சொன்ன வார்த்த ஒவ்வொன்னும் கணேசனோட வாழ்கையவே மாத்திருச்சு.
அப்படி என்னதான் சொல்லுச்சு தேன் மொழி....
அடுத்த இடுகையில் ............

Tuesday, November 9, 2010
thanimai chuvadugal
இன்று நாள் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமல் தான் தொடங்கியது , அதற்கும் காரணம் இருக்கிறது , இன்னைக்கு மறுபடியும் சென்னை போகணும் லீவ் முடின்சது. இது நானா அசை பட்டு எடுத்த முடிவு தான், சின்ன வயசுலருந்தே சினிமான்னா அப்படி ஒரு காதல். பொதுவா தமிழ் பொண்ணுங்க சினிமாவுக்கு வர விரும்பமாட்டாங்க அதுலயும் சவுத் தமிழ்நாடுன்னா சொல்லவே வேணாம், அப்படி இருக்கும்போது மதுரை பொண்ணான நான் சினிமாவ தேர்ந்தேடுத்ததுக்கு காரணம் சின்ன வயசுலருந்தே எனக்குள்ள இருந்த சினிமா மோகம்னே சொல்லலாம். சாப்பிடுரேனோ இல்லையோ தினம் ஒரு படமாவது பாத்துருவேன், நான் எங்க வீட்ல அதிகமா திட்டு வாங்கினதே சினிமாக்கு போகணும்னு அடம் பிடிச்சுதான். சில சமயம் போக நினைச்சு போகமுடியாம போனா மணிகணக்குல அழுதுருக்கேன். சினிமா ஒரு என்டேர்டைன்மேண்ட மட்டும் இல்லாம என் வாழ்கைய ஆக்ரம்மிக்க ஆரம்பிச்சது, நான் பாக்குற விஷயங்கள், பேசுற வார்த்தைகள், மனிதர்கள் எல்லாத்தையும் சினிமாவோட கலந்து பாக்க ஆரம்பிச்சேன், சில கதாபாத்திரங்கள் கூட வாழ ஆரம்பிச்சேன். அதுனாலதான் தனியா தூங்கி கூட பழக்கம் இல்லாத நான் தைரியமா சென்னை வரைக்கும் தனியா வந்து படிக்க முடிவு செஞ்சேன். அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு, சினிமாவ தவிர வேற ஏதுவும் என்னால படிக்கவோ செய்யவோ முடியும்னு எனக்கு தோனல ஏன்னா நான் இதுவரை படிச்ச எல்லா இடத்துலயும் என்னால முழு மனசா படிக்க முடிஞ்சதில்ல, சொல்ல போனா கணிதமும், வரலாறும், கணக்கும் எனக்கு ஏப்பவுமே பிடிச்சதில்லை , புரிஞ்சுக்கவும் நான் விரும்பல, கல்லூரிக்கு போகவே வெறுப்பா இருக்கும்.
பாடம் பிடிக்கல அதுனால படிக்கல, சினிமாவ தேர்ந்தெடுதேன். எங்க அப்பா அம்மாக்கு நான் செல்லம்ரதால அவுங்க என் ஆசையா நிறைவேத்தினாங்க, சென்னை போனேன் படிக்க, என் பிரச்சன எல்லம் தீந்ததுனு நினைச்சேன். எனக்கு பிடித்த பாடம், நான் ரசிச்ச விசயத்த படிக்க போறேன் அதுக்கு பரிச்சையும் , மதிப்பெண்ணும். நான் அதிர்ஷ்டசாலி இல்ல?
இல்ல, முதல்ல நானும் அப்படி தான் நினைச்சேன், ஆனா நாட்கள் போக போக தான் உணர்ந்தேன் நான் கனவுகளை தேடி என் நிஜங்களை தொலைச்சுட்ருகேன்னு . ஆமா, எனக்கு கல்லூரி பிடிச்சது ஆனா கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்கள்ல என் தனிமை என்ன கொடுமை செய்ய ஆரம்பிச்சது.
மதுரைல இருந்த வர வீடு பிடிச்சது.., கல்லூரி பிடிக்கல . இப்ப கல்லூரி பிடிச்சுருக்கு ஆனா வீட்டுக்கு வந்தா தனிமை கொல்லுது. ஏதேதோ இலட்சியங்கள் , என்னென்னவோ ஆசைகள் இதுக்காக எல்லாம் போராடி உறவுகளோட பக்கத்துல வாழற இனிமைய தொலைச்சுடோம்னு தோணுது. முன்னெல்லாம் சென்னை வாழ்க்கை தூரத்து விழாக்கா பள பளன்னு தெரிஞ்சது, பக்கதுல போனப்பறம் தான் அதுல விட்டில் பூச்சியா விழுந்துட்டதா உணர்ரேன், மதுரைக்கு வந்துட்டு போற ஒவ்வொரு தடவையும் இனம் புரியாத தவிப்பு எனக்குள்ள ஏற்படுது, சென்னைலருந்து மதுரை கிளம்பும்போது இனம் புரியாத பூரிப்பும் இருக்கு.., இப்ப நான் தவிப்போட இத எழுதுறேன். நான் மட்டும் இல்ல சொந்த ஊற விட்டு படிப்புக்காகவும், வேலைக்காகவும் எங்கெங்கயோ வாழ்ந்துட்ருக்க பல பேர் இப்படி தான் நினைப்பாங்க. இனியாவது வாழ்க்கையோட உண்மையான சந்தோசத்த முடிஞ்சா உணருவோம்.

Monday, November 8, 2010
mynaa
Mynaa can't be referred as a common kind of film in the tamil industry but at the same time it is not a film that is different from all kinds of tamil cinema. The narrative structure, kind of people and the locations has given a different feel to the movie. The director is bold enough as the very few directors who have successfully spoken about the people and their life's in a remote village. The special thing that makes the film unique is the director's choice of a village in a remote hill.
The story of the film goes like this, Suruli is a common youngster of a remote village who has bidden good bye to his studies and is working from childhood. His only goal in life is to marry Mynaa who is his childhood friend. Suruli has been helping Mynaa and her mother since school days. The friendship between the two becomes a serious love at one point. But, Mynaa's mother is against them getting married and lounches a complaint against Suruli in the police for which he is arrested. Then at one point, Suruli escaps from the prison and two police officers come chasing him. They get him exactly when he he is ready to elope with Mynaa.
The journey starts from here when Mynaa and Suruli start their travel with the two cops.
the cops are overwhelmed by the timely help from Mynaa and Suruli during the journey towards the prison and decide to help them. Then there are unsuspected twists in the story which leads to the climax.
The director of the movie has to be appreciated for his brave effort. He has succeeded in rendering what he wants from the new faces. The newly found Vidharth (Suruli) and Amala (Mynaa) have really portrayed the lifes of south indian village youth who struggle to win their love. The eyes of Amala speaks louder then the other characters in the movie. It could have been better if Vidharth has not been over expressive at places. It is totally unfair if i forget to mention D.Iman the music director, he has shown a different face of him in this melodies. Specially, chinga chinga chinuku song makes the audience move to its rythm
Sukumar's cinematography makes the viewers feel the cold breeze of the hill station through their eyes.
the editor L.K.V.Doss has done justice to the film. Director Prabu Solomon has stuffed the film with puches all over like Suruli riding the cycle for hours in the same place and projecting the beam
light on Mynaa's books for her to study for the examination. Scenes like Mynaa getting hurt on the foot and Suruli carrying her on his back and the climax brings tears on the eyes of most of the women in theaters. Though the movie resembles some of the recent releases when u see the posters because of the costumes and make-up, you will change your idea when you watch the movie on theaters. The costumes of the movie were mostly hired from the people living around the villages the movie was shot. I have no idea why the director has allowed the audience to feel bored at some places of the movie. The movie seems over dramatic sometimes since there is too much sadness and tears all over the film.
Whatever it is, the fact that Mynaa is going to be a diwali treat for all kollywood fans is undeniable.
Post Options

Subscribe to:
Posts (Atom)